ஊருக்கு சென்றிருந்த உதவியாளர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. வேலூரில் பரபரப்பு….!!!

இளநிலை உதவியாளர் வீட்டில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் வேலூர் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் குணசீலன் வசித்து வருகின்றார். இந்நிலையில் குணசீலன் தனது மனைவி கோமாலீஸ்வரியுடன் குடியாத்தத்திற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் குணசீலன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் பணம் மற்றும் 3 உண்டியல்களில் வைக்கப்பட்டிருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில் குணசீலன் வீட்டின் கதவு உடைந்து கிடப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குணசீலன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பணம் கொள்ளை அடிக்க கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பற்றி தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் கைரேகை நிபுணர்களுடன் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *