நைசாக பேச்சுக் கொடுத்த பெண்…. முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசி தேடும் போலீஸ்….!!!

முதியவரை ஏமாற்றி பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள சேத்துவண்டை கிராமத்தில் நாடக ஆசிரியரான ஜெகநாதன் வசித்து வருகின்றார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகின்றார். இந்நிலையில் தனது பையில் 10 ஆயிரத்துடன் சுற்றி வந்த இவர் குடியாத்தத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினமும் சாப்பிட்டு வந்துள்ளார்.

இவர் வழக்கம் போல சாப்பிட வந்த போது பெண் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் அவர் பணப்பையை மேஜையில் வைத்து விட்டு கை கழுவ சென்ற போது பேச்சு கொடுத்துக் கொண்டிருந்த பெண் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி முதியவர் குளித்தலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அம்மா உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தி பணத்தை திருடிச் சென்ற பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *