கோவிலின் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பூவராகமூர்த்தி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் பூஜை முடிந்தவுடன் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை திரும்பி வந்து பார்க்கும் போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.