அதையும் சேர்த்து கொண்டு போயிருக்கலாம்…. வசமாக சிக்கி கொண்டவர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

வாகனசோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 3 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில்  ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது . இதனால் பொதுமக்களுக்கு பணமோ, பரிசுபொருளோ வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரமூர்த்தி பட்டி பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில், ராஜபாளையம் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவர் எந்த ஒரு உரிய ஆவணமும் இன்றி 3 லட்சம் ரூபாய் பணம் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜ்குமாரிடம் இருந்த பணத்தை பறக்கும்படை தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து, சாத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வெங்கடேஷ், ராஜமணி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.