“முகவரி கேட்பது போல நடித்த 4 பேர்” முதியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

முதியவரின் கவனத்தை திருப்பி மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் துபாயிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் அப்பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகையை அடமானம் வைத்து விட்டு ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்துடன் வெளியே வந்துள்ளார். இதனை நோட்டமிட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பல் நடராஜனிடம் முகவரி கேட்பது போல நடித்து பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து நடராஜன் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சரவண ராஜ் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த ரூபாய் 80,000 பணத்தை பறிமுதல் செய்து முதியவரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *