இதுக்கு போயி இப்படியா!!… மூதாட்டியின் பரபரப்பு புகார்… சிறையில் அடைத்த காவல்துறையினர்…!!

பண வரவு பிரச்சனையில் மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் சுலோச்சனா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் ஹரிஷங்கர் என்பவருக்கும் சுலோசனா என்ற மூதாட்டிக்கும் பண வரவு தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. எனவே ஹரிஷங்கர் மது போதையில் சுலோச்சனாவை திட்டி அரிவாளை காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த சுலோச்சனா அருகிலுள்ள குளித்தலை காவல் நிலையத்தில் ஹரிசங்கரின் மீது புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஹரிஷங்கரை கைது செய்ததோடு குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.