புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டது.
காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலிலுள்ள 2 உண்டியல்களில் வசூலான காணிக்கையை கோவில் பணியாளர்கள், சென்னை தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இப்பணி கோவில் செயல் அலுவலர் முன்னிலையில் வைத்து பணி நடைபெற்றது. அதில் காணிக்கையாக 242 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி மற்றும் ரூபாய் 53 லட்சத்து 65 ஆயிரத்து 176 வசூலாகி இருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.