நகை கடை உரிமையாளரிடம் “ரூ. 24 1/2 லட்ச ரூபாய்” மோசடி…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் பகவதியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் மீனாட்சிபுரத்தில் நகை கடை வைத்துள்ளேன். இந்நிலையில் காட்டாதுறை பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் என்பவர் தொழில் சம்பந்தமாக எனக்கு பழக்கமாகி நண்பரானார். அவர் என்னிடம் தங்க நகைகளை வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு தேவைப்படுவதாக தங்கப்பன் 482 கிராம் தங்க நகைகளை வாங்கி சென்று அதற்கு 24 1/2 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். ஆனால் கூறியபடி அவர் பணத்தை தரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே நகையை மீட்டு தந்து தங்கப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தங்கத்தினை கைது செய்தனர்.