மக்களே உஷார்…! கடன் கொடுப்பதாக கூறி ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கோரணம்பட்டி பகுதியில் லாரி டிரைவரான கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட 6 பேர் 25 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கு பத்திர கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி கோவிந்தனிடம் இருந்து 22 தவணைகளாக 2 லட்சத்து 50 ஆயிரத்து 850 ரூபாய் வாங்கியுள்ளனர். ஆனால் கூறியபடி கடன் எதுவும் வழங்கவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கோவிந்தன் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிராஜன் உள்பட 6 பேர் கோவிந்தனிடம் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் ரவிராஜனை கைது செய்தனர். அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply