திருமண சேவை மையத்தில் இருந்து பேசிய பெண்…. இன்ஜினியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் சத்யா நகரில் ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி பிரசாத்(32) சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஹரி பிரசாத் திருமண சேவை மையத்தில் பெண் கேட்டு பதிவு செய்துள்ளார். அந்த சேவை மையத்தில் இருந்து ஹரி பிரசாத்தை பார்வதி என்ற பெண் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் 23 ஆயிரம் பணம் வேண்டும் எனவும், பணத்தை விரைவில் திரும்பத் தருகிறேன் எனவும் அந்த பெண் கூறியுள்ளார். இதனை நம்பி ஹரி பிரசாத் அந்த பெண்ணிற்கு பணத்தை அனுப்பியுள்ளார். சிறிது நாட்கள் கழித்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து ஹரி பிரசாத் தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.