காஞ்சிபுரத்தில் வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கை கழுவிய பிறகே ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காஞ்சிபுரத்தில் இந்தியன் வங்கி ஏடிஎம்-களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கைகழுவ கிருமி நாசினி மருந்து வழங்கப்படுகிறது. தமிழகத்துக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் நபர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என்பதால், காஞ்சிபுரத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏடிஎம் மையம் வரும் வாடிக்கையாளர்களுக்கு கைகழுவும் திரவம் கொடுத்து ஹாண்ட் வாஷ் செய்த பிறகே ஏடிஎம்மில் பணம் எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

காந்தி சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் பொன்னையா பார்வையிட்டார். வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி பயன்படுத்தி கை கழுவிய பிறகே ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டுமென இந்தியன் வங்கியின் மேலாளர் சண்முகராஜன் அறிவுறுத்தினார்.