கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பாரதியார் தெருவில் தொழிலாளி கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மார்க் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கௌதம் என்பவர் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
எனவே கண்ணன் அருகிலுள்ள வெங்கமேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.