நடைபெற்ற அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய ஊழியர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!

டாஸ்மார்க் மேலாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் தொழில்பேட்டையில் மதுபான கடை மேலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. அங்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு மேலாளர் உள்ளிட்டவர்களிடம்  விசாரணை நடத்தி அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

அப்போது மாவட்ட மேலாளர் ரவி சந்திரனிடமிருந்து ரூ 12 ஆயிரமும், ஓட்டுனர் சபரிநாதனிடமிருந்து ரூ 25 ஆயிரமும், மேற்பார்வையாளர் ராமலிங்கத்திடம் ரூ 25 ஆயிரம் என மொத்தம் ரூ 62 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *