என் அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என்று தமன்னா பேட்டியளித்துள்ளார்.
அஜித், விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை தமன்னா. இவர் கிட்டத்தட்ட 12 வருடங்களாக சினிமாவில் நடிதுக்கொண்டு கொண்டு வருகிறார். தற்போது 29 வயதாகும் தமன்னா தன்னுடைய சினிமா வாழ்க்கை, திருமணம் குறித்து ருசிகர பேட்டி ஓன்று அளித்துள்ளார்.

“அவர் அளித்த பேட்டியில், “நான் வருடத்திற்கு 4 முதல் 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. மற்றவர்களை போல நிறைய படங்கள் உங்களுக்கு இல்லையே ஏன் என்று சிலர் கேட்கிறார்கள். நான் மிகவும் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறையவே நடித்துவிட்டேன். மீண்டும் அதே மாதிரி நடிக்க வேண்டாம் என எனக்கு தோன்றியது.
இந்த ஒரு காரணத்தினால் தான் எனக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உண்மையாக வேலை செய்வதுதான் எனது வெற்றியின் ரகசியம். செய்கின்ற வேலையை மனபூர்வமாக ஒன்றி செய்தாலே வெற்றிகள் பல தேடி வரும். நான் சூட்டிங்கில் இருக்கும்போது எனது அம்மா வந்து பேசினாலும் பேசமல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிடுவேன். என்னுடையை குணம் நன்கு தெரிந்த எல்லோரும் வீணாக போன் செய்து தொல்லை கொடுக்கமாட்டார்கள்.
உங்களுக்கு திருமணம் எப்போது? என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் வீட்டில் எனக்கு திருமணம் செய்துவைப்பதற்கான தீவிர ஏற்பாடுகளை தொடங்கிவிட்டனர். என் அம்மா எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அதனால் மாப்பிள்ளை தேடுதல் வேட்டையில் அவர் மிகவும் பிஸியாக இருக்கிறார். எனது திருமண விஷயத்தை பெற்றோர் முடிவுக்கே நான் விட்டு விட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.