ரமலானுக்கு பின் மிகச்சிறந்த நோன்பு மொஹரம் நோன்பு….!!

அன்புக்கினியவர்களே ரமலான் மாதத்திற்கு பின்பாக நோன்புகளில் மிகச்சிறந்தது மொஹரம் மாத நோன்பு என்று நபி சல்லலலாம்  கோரினார்கள்.அந்த நோன்பு ஏன் வைக்கவேண்டுமென்று தெரிந்து கொள்வோமா

நபி ( ஸல் ) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷிரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள்.நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள் , “இது ஒரு புனிதமான நாளாகும். இதில் அல்லாஹ் மூஸா ( அலை ) அவர்களையும் , அவர்களது சமுதாயத்தினரையும் பிர்அவ்னிடமிருந்து காப்பாற்ற்றினான் . மேலும் பிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான்.இதனால் மூஸா (  அலை ) அல்லாஹ்_வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல் ) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” ( ஆதாரம் : புகாரி , முஸ்லீம் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *