“மோடியின் முதல் வெளிநாட்டு பயணம்” வெளியுறவுத் துறை அறிவிப்பு…!!

இரண்டாவது  முறையாக பிரதமராக  பொறுப்பேற்றுள்ள மோடி மேற்கொள்ள இருக்கும் முதல் வெளிநாட்டு பயணத்தை வெளியுறவுத் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற பாஜக ஆட்சி அமைத்து பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவி பிரமாணம் செய்து  கொண்டார். இந்நிலையில் 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணத்தின் திட்டத்தை வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே வெளியிட்டுள்ளார்.

அதில் பிரதமர் மோடி  ஜூன் 8_ஆம் தேதி மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு  மாலத்தீவு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். பின்னர் மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொள்ளும் மோடி 9_ஆம் தேதி இலங்கைக்கு  செல்ல இருக்கின்றார். பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்த அதிகாரபூர்வ தகவல்களை மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.