“திரளாக வாக்களியுங்கள்” வாக்காளர்களுக்கு மோடி வேண்டுகோள்….!!

முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது . முதற்கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது. அதே போல ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கி, ஒடிசா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு  சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் ஜனநாயக கடமை ஆற்றி சாதனை நிகழ்த்த வேண்டும் : பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்நிலையில் இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அதில், முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்கள் சாதனை படைக்கும் வகையில்  பெரிய எண்ணிக்கையில் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக முதல் முறை வாக்களிக்க போகும்  இளைஞர்கள், அதிக அளவில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *