”பிளாஸ்டிக் இல்லா இந்தியா” பிரதமர் மோடி வேண்டுகோள் …!!

காந்தியில் பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவாக உருவாக்க வேண்டுமென்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களிடம் மாதம் ஒருமுறை வானொலி மூலம் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமை அகில இந்திய வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சி மூலமாக மோடி பேசுவார்.அந்த வகையில் இன்று பொதுமக்களிடம் பேசிய மோடி அக்டோபர் 2ந்தேதி  தேச பிதா மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் தினம் பற்றி உலகம் நாடுகள் முழுவதும் உள்ள மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பிரதமர் மோடி

இந்தியா ஒரு பெரிய திருவிழாவிற்கு தயாராகி வருகின்றது.மக்களுக்கு சேவை செய்யும் உணவர்வு காந்தியின் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்து உள்ளது. அவரின் இந்த 150_ஆவது பிறந்தநாள் தின கொண்டாட்டத்தை நாம் பிளாஸ்டிக் இல்லா இந்தியாவாக அர்ப்பணிப்புடன் கொண்டாட வேண்டும். தூய்மையான இந்தியாவை உருவாக்க நாம் பெரிய இயக்கத்தினை முன்னெடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.