வெளியான திடுக்கிடும் தகவல்….. பழைய திட்டத்தை புதிதாக அறிவித்த மோடி…!!

இன்று பிரதமர் நரேந்திர மோடி  அறிவித்த ‘மிஷன் சக்தி’ என்ற திட்டம் பல வருடங்களுக்கு முன்பே அறிவித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.இந்நிலையில் விண்வெளி சாதனை பற்றி நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்.அவரது உரையில், விண்வெளித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளது. நமது நாட்டின் செயற்கைக்கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் ‘மிஷன் சக்தி’சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களிலேயே வெற்றி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

‘மிஷன் சக்தி’ சோதனை க்கான பட முடிவு

தற்போது  இந்த திட்டம் பழைய திட்டம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2012_ஆம் ஆண்டு இந்திய விண்வெளித்துறையும்,பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  துறையும்  சோதனை நடத்தி அது வெற்றி பெற்றதாகவும் அறிவித்தது. மேலும் அப்போது இருந்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (Defence Research and Development Organisation) துறையின் தலைவர் சரஸ்வத் கூறுகையில்,இந்த சோதனை இந்தியாவின் மிகப்பெரிய சாதனை ஆகும் என்று கூறினார்.இந்தியாவின் பாதுகாப்பு விண்வெளியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும்  தெரிவித்தார். இந்நிலையில் தான் தற்போது நடைபெற்ற  சோதனையை நடத்தி  6 வருடங்களுக்கு மேலாகிறது.ஆனால் தற்போது இதை புதிதாக செயல்படுத்தியதாக  பிரதமர் நரேந்திர மோடி  தெரிவித்துள்ளார்.