மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Image result for bjp 100 days

பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திட்டம் சகிப்புத்தன்மையற்ற செயல்கள், ஜனநாயக உரிமை பறிக்கப்படுதல்  ஆகியவைதான் பாரதிய ஜனதா கட்சியின் 100 நாள் சாதனை என்று இடது சாரி கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.இதை தொடர்ந்து மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் சரிந்து மட்டுமல்லாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மத்திய அரசின் அதிருப்த்தியால் பதவி விலகி வருகின்றனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Image result for bjp 100 days

மேலும் தேசிய பதிவிட்டு குடிமக்கள் பதிவேட்டில் செய்யப்பட்ட திருத்தங்களால் அசாமில் 20 லட்சம் பேர் நிகழ்காலத்தை இழந்து  இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பதிவை முன்வைத்து மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களை பாரதிய ஜனதா கட்சி மிரட்டி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.