மோடி தான் முடிவு செய்வார் “மத்திய அமைச்சரவையில் அதிமுக” குறித்து தமிழிசை பதில்…!!

மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து பாஜக தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வார்கள் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

மோடியின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு மாநில முதல்வர்கள் , ஆளுநர்கள் பங்கேற்றனர். இந்த சூழலில் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணி கட்சி அதிமுக என்பதால் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரும் டெல்லி சென்றனர். அதிமுக_விற்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுழலில் அதிமுக_விற்கு இடமில்லாமலே அமைச்சரவை பொறுப்பேற்றது.

தமிழிசை க்கான பட முடிவு

இந்நிலையில் தமிழக பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் பத்திரிக்கையாளர்கள் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுப்பியதற்கு மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது குறித்து கட்சி தலைமை மற்றும் பிரதமர் மோடி முடிவு செய்வர்  என்று தமிழிசை பதில் அளித்துள்ளார்.