22-ஆம் தேதி யாரும் வெளியே வர வேண்டாம் – மோடி எச்சரிக்கை …!!

கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகின்றார். அதில் ,

மத்திய சுகாதார துறை அமைச்சர் இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும் – இதுவே நம் தாரக மந்திரம்.

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் தவிர மற்றவர்கள் யாரும் ஞாயிறன்று வெளியே வர வேண்டாம். மார்ச் 22-ஆம் தேதி ஞாயிறு அன்று யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இந்தியாவை கொரோனா பாதிக்காது என நினைப்பது தவறு கொரோனா பரவலை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை.