மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது .
மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்து, இருவரும் சந்தித்துப் பேசுவது குறித்தும் ஆலோசித்து இருக்கிறார்கள். மேலும் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது . அதில் கூறியிருப்பதாவது ,

ஜப்பானின் ஒசாகா நகரத்தில் வருகின்ற ஜூன் மாதம் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்க இருப்பதாகவும் ,அப்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும் இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகள் பற்றி ஆலோசிக்க திட்டமிட்டிருக்கிறார்கள் .அதே சமயத்தில் ஒசாகா நகரத்தில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.