கேதார்நாத் குகையில் தியானம் செய்து வரும் மோடி.!!

பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்ற பிரதமர்  மோடி காவி உடை  அணிந்து தியானம் செய்து, தொடர்ந்து அவ்விடத்தில்  அவர் 20 மணி நேரம் இருப்பார் என்று சொல்லப்படுகிறது. கேதார்நாத்தில் சுவாமிக்கு நடைபெறும்  ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார். பிரதமர் மோடியின்  வருகையையொட்டி அப்பகுதி முழுவதும்  பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில் இன்று முழுவதும் தங்கும் அவர் நாளை இங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் சென்று, மாலை அவர் மீண்டும் டெல்லி திரும்புகிறார்.