அணுசக்தி மற்றும் விண்வெளி துறையை பெற்றுக்கொண்ட மோடி ….!!

அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை அமைத்தது. நேற்று மாலை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு தனி தனி இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

மோடி க்கான பட முடிவு

இந்நிலையில் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களில் உள்துறை பொறுப்பு அமித்ஷாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல பாதுகாப்புத்துறை பொறுப்பு ராஜ்நாத்சிங்கிடமும், நிதி துறை அமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமன் வசமும் வழங்கப்பட்டுள்ளது. அணுசக்தி, விண்வெளி, ஓய்வூதியம் ஆகிய துறைகளை பிரதமர் நரேந்திர மோடி தன் வசம் வைத்துள்ளார்.