ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இரு நாட்டு உறவுகள் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தினார்.
கிர்கிஸ்தானின் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி விமானம் மூலம் புறப்பட்டு சென்று பங்கேற்றார். இதையடுத்து நடைபெற்ற மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் சிரித்த முகத்துடன் கை குலுக்கி கொண்டனர்.

இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு முக்கிய விஷயங்கள் பற்றியும் பேசியதாக தெரிகிறது. அமேதியில் ரஷ்யா துப்பாக்கி தொழிற்சாலை அமைக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி புதினுக்கு நன்றி தெரிவித்தார். இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் சீனா, பாகிஸ்தான், இந்தியா, ரஷ்யா உட்பட 8 நாடுகள் உறுப்பினராக உள்ளன. முன்னதாக பிரதமர் மோடி சீன அதிபரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.