“பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் “மோடி பேச்சு ..!!

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளே அதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி  பேசியுள்ளார்.

ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் இரு நாள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணம் சென்ற போது குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தைபார்வையிட்டதாக தெரிவித்தார்.

Image result for மோடி

அந்த புனிதமிக்க தேவாலயத்தில் அப்பாவி பொது மக்களின் உயிர்களை காவு வாங்கிய பயங்கரவாதத்தின் கோர முகத்தை தான் கண்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் அதற்கு நிதி அளிக்கும் நாடுகளே அந்த பயங்கரவாதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பயங்கரவாத ஒழிப்பு பிரிவு அக்கறை காட்ட வேண்டும் என்றும், அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தலைவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக ஒரு சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *