மோடி ஒரு யுகபுருஷர் ”பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும்” ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம்…!!

காஷ்மீர் விவகாரத்தில் மோடி ஒரு யுகபுருஷர் , அவருக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டுமென்று ம. பி MP குமன் சிங் தமோர் புகழாரம் சூட்டியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இதற்க்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எழுப்பினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் கடுமையான வன்முறை ஏற்படுமென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வாரமாக அளவுக்கதிகமான துணை இராணுவப்படை வீரர்கள் காஷ்மீர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் பல்வேறு கட்சி தலைவர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக காஷ்மீரை இரண்டாக பிரிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக_வை எதிர்த்து அரசியல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி , சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து மத்திய பிரதேசத்தின் ரட்லம் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. குமன் சிங் தமோர், பிரதமர் மோடியை புகழ்ந்துள்ளார்.

MP Kuman Singh Tomar க்கான பட முடிவு

இது குறித்து அவர் தெரிவித்த கருத்தில் , மோடிஜி ஒரு யுகபுருஷர்.  அவர் எடுத்துள்ள இந்த முடிவால் கோடிக்கணக்கான இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரதமர் மோடிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்தார்.