ட்விட்டர் பக்கத்தில் காவலாளி என்ற பெயரை நீக்கிய மோடி..!!

பிரதமர் மோடி ட்விட்டரில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கியுள்ளார். 

பிரதமர் மோடி தேர்தல் தொடங்கியதும் நான் காவல் காரன் என்று ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அதை தொடர்ந்து ட்விட்டரில் சவ்க்கிதார் (காவலாளி) மோடி என மாற்றினார். இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்தன. இதை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மோடியை போலவே தங்கள் பெயருடன் அந்த பெயரை சேர்த்தனர்.

Image result for narendra Modi Official Twitter handle

தற்போது மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக 351 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் பாஜக வெற்றி உறுதியாகிவிட்டது. இதையடுத்து  உலக தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தன் பெயருடன் சேர்த்திருந்த காவலாளி என்ற பெயரை நீக்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *