“வெற்றி நடைபோடுகிறது ப்ரைம் மினிஸ்டர் மோடி திரைப்படம் “

தீ பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படம் மே 24 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி என்ற திரைப்படத்தில் பாரதப் பிரதமர் மோடி அவர்களது கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகன் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இந்தப் படமானது ஏப்ரல் 11ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு திரைப் படத்தை வெளியிடாமல் திரைப்படக்குழு காத்திருந்தது இதனை தொடர்ந்து  தேர்தல் முடிந்த நிலையில் மே 24ம் தேதி படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளராகள்  திரையில் வெளியிடச் செய்தனர்.   இந்நிலையில் படம் வெளியாகி மாபெரும்  வரவேற்பை பெற்றுள்ளது .