அரசியலை கற்று கொடுத்தது மோடி… அன்பினால் அவரை கட்டியணைத்தேன்….ராகுல் காந்தி விளக்கம்…!!

என்னுடைய அன்பினை வெளிப்படுத்தவே பிரதமர் மோடியை கட்டி அணைத்தேன் என்று  மாணவிகளின் கேள்விக்கு ராகுல்காந்தி பதில் கூறினார்.

 

பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நகர்க்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை வந்த ராகுல் காந்தி காலை 11.30 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் இருக்கும்  ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேஞ்ச் மேக்கர்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற  கருத்தரங்கில் கலந்து கொண்ட ராகுல்காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பிரதமர் மோடியை கட்டித் தழுவியது ஏன்? என்று மாணவிகள் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய ராகுல்காந்தி , என்னுடைய குடும்பத்தை பிரதமர் மோடி எப்போதும் திட்டுவார் . எனக்கு பிரதமர் மீது எனக்கு மிகுந்த அதிக அன்பு உண்டு எனவே அன்பின் அடையாளமாகவே நான் பிரதமர் மோடியை கட்டி அணைத்தேன் . எனக்கு அரசியலை கற்றுக்கொடுத்ததால் பிரதமர் மோடி மீது அன்பு ஏற்பட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.