நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி..!!

தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடி காந்தி ,வாஜ்பாய் நினைவிடங்களுக்கு சென்று மரியாதையை செலுத்தினார் .

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 7 மணி அளவில் மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.

அதற்கு முன்பாக அவர் டெல்லியில் உள்ள போர் நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு ,அதன்பின் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோரின் நினைவு  இடங்களுக்கும் அமைச்சர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். இவை அனைத்தும் முடிந்த நிலையில் மாலை 7 மணி அளவில் நடக்கவிருக்கும் கோலாகல பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கு தயார் நிலையில் இருக்கிறார் பிரதமர் மோடி