“மோடி முகம் சுருங்கி விட்டது” ராகுல் காந்தி விமர்சனம்…!!

 பிரதமர் மோடியின் முகம் சுருங்கி விட்டதாக மத்திய பிரதேசதில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. 4 கட்ட  நிறைவடைந்த நிலையில் மீதம் இருக்கும் 3 கட்ட வாக்குப்பதிவு தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மத்திய பிரதேச மாநிலத்தின் திகம்கர் மக்களவை தொகுதியில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பாராளுமன்றத்துக்கு 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் முகம் சுருங்கி காணப்படுகிறது. அவர் தனது பேட்டிகளில் ஒருவித தயக்கத்தை வெளிப்படுத்துகின்றார் என்று தெரிவித்தார். மேலும் இந்திய விமானப்படையிடம் இருந்த ரூ.30 ஆயிரம் கோடியை எடுத்த மோடி அம்பானியின் பையில் வைத்து விட்டதாக மோடி மீது குற்றம் சாட்டினார்.  காங்கிரஸ் கட்சி 25 கோடி மக்களின் நலனுக்காக குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.