மோடி என்று ஒரு சமூகமே இல்லை…. ராகுல் காந்தி வழக்கறிஞர் விளக்கம்….!!!!

மோடி சமூகத்தினரை தவறாக வகைப்படுத்துவதாக கூறி ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்நிலையில் ராகுல் தகுதிநீக்கத்தை கண்டிக்கும் விதமாக கையில் பதாகைகள் ஏந்தியும், பிரதமர் மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்குள் வந்தனர்.

இது தொடர்பாக ராகுல் வழக்கறிஞர் பன்வாலா பேசியபோது “உண்மையில் மோடி என்ற பெயரில் எந்த சமூகமும் இல்லை. மோத் வானிக், மோத் காஞ்ச்சி போன்ற சமூகங்கள் தான் இருக்கிறது. சட்டத்தின்படி அடையாளம் காண முடியாத சமூகமாக இருக்கும்போது இவர்களால் புகார் அளிக்கவே முடியாது” என விளக்கினார்.