தமிழகத்தில் நடைபெற உள்ள காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். கமலின் இந்த பேச்சுக்கு பிஜேபி , அதிமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கடும் கணடனம் தெரிவித்தனர். குறிப்பாக அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒருநாள் கமலின் நாக்கு அறுக்கப்படும் என்று கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஒரு இந்து தீவிரவாதியாக இருக்கவே முடியாது’’ என்று கூறியிருந்தார்.
