ரஜினியை “தலைவா” என அழைத்த மோடி…. கூறிய வாழ்த்து…!!

பிரதமர் மோடி ரஜினியை “தலைவா” என அழைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “தலைவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. வித்தியாசமான மற்றும் கடின மான கதாபாத்திரங்கள் மூலம் உயர்ந்த ரஜினி பல தலைமுறைகளில் பிரபலமானவர் என்று பதிவிட்டுள்ளார்.