மீண்டும் மோடி தமிழகத்திற்கு வருகை !!… களைக்கட்டும் பாஜக பிரச்சாரம் ….

அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க தமிழகத்திற்கு மீண்டும் வருகை தர இருக்கிறார் பாரத பிரதமர் மோடி

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது  ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன இதனை அடுத்து தேர்தல் கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை அடுத்து வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் மதுரையிலும் பிப்ரவரி மாதம் திருப்பூர் கன்னியாகுமரியிலும் கடந்த ஆறாம் தேதி சென்னையிலும் நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்

தற்போது பிரதமர் மோடி மீண்டும் பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகிறார் முதலில் அவர்  8 15 16 ஆகிய மூன்று தேதிகளில்  தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்பட்டது இந்த பிரச்சார பயணத்தின் தேதி  மாற்றப்பட்டுள்ளதாக தமிழக பாஜகவினர் கூறி உள்ளனர் இதன்படி வருகிற 13-ஆம் தேதி அன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியிலும் ராமநாதபுரத்திலும் நடைபெறும் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச இருக்கிறார்  இதன் பின்னர் 14-ஆம் தேதி காலை சேலத்திலும்  மாலையில் அவர் கோவையில்  நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்று பேச இருக்கிறார் .

பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட  அவர்களது கூட்டணி வேட்ப்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க மோடி அவர்கள் வருகை தருகிறார் . தமிழக பாஜக நிர்வாகிகள் மோடியின் இந்த பிரச்சார  பயணத் திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளி இடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர் 

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்