“பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க போறோம்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. கரூரில் பரபரப்பு….!!!

பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஐக்கிய விவசாயிகள் 20 – க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்திரபிரதேசத்தில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நீதி கேட்டும் கரூர் மாவட்டம் ஆர்.எம்.எஸ் தபால் அலுவலகம் முன்பு விவசாயிகள் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டு பிரதமரின் உருவ பொம்மையை எரிக்க கொண்டு வந்ததால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த  காவல்துறையினர் அதனை அவர்களிடம் இருந்து பறித்து சென்றனர்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பா.ஜ.கவினர் போராட்டத்திற்கு எதிர்ப்பு விவசாயிகளிடம் தகராறில் ஈடுபட்டனர். எனவே காவல்துறையினர் பா.ஜ.கவினரை தடுத்து நிறுத்தி நிறுத்தியதோடு பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் 20 -க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து போலீஸ் பஸ்ஸில் ஏற்றி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *