“சரக்கு வாங்க நிற்கும்போது போனை தூக்கிட்டாங்க” காட்டிக் கொடுத்த சி.சி.டிவி…. போலீஸின் அதிரடி நடவடிக்கை….!!!

டாஸ்மார்க் கடையில் செல்போன் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டில் அமைந்துள்ள டாஸ்மார்க்கில் சேலம் மாவட்டம் எடப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மது வாங்குவதற்காக வரிசையில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் நின்ற மர்ம நபர் ஒருவர் மது வாங்குவது போல நடித்து முத்துக்குமாரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூபாய் 23 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடி சென்று விட்டார். எனவே முத்துக்குமார் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டாஸ்மார்க் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்து பார்த்ததில் மர்ம நபர் ஒருவர் செல்போனை திருடி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

இதனையடுத்து செல்போன் திருடிய மர்ம நபர்கள் மீண்டும் வருகின்றார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் டாஸ்மாக் கடையின் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த நபர் மீண்டும் செல்போன் திருட வந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர் வால்டாக்ஸ் ரோட்டை சேர்ந்த தண்டபாணி என்பது தெரியவந்தது. பின்னர் காவல்துறையினர் செல்போனை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அந்த மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்து கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *