“செல்போன் உபயோகித்த மாணவர்” நள்ளிரவில் நடந்த கோர சம்பவம்…. கோவையில் பரபரப்பு….!!!

செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள மதுக்கரை காந்திநகரில் மயில்சாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு பி.எஸ்.சி ஐடி முதலாம் ஆண்டு படித்து வரும் சிவராம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களை பார்க்க சென்ற சிவராம் இரவில் வீட்டிற்கு திரும்பினார். பின்னர் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டபடியே உபயோகித்துள்ளார். இதனையடுத்து தான் படுத்திருந்த கட்டிலில் செல்போனை சார்ஜ் போட்டபடியே வைத்துவிட்டு தூங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து நள்ளிரவில் அவர் படுத்திருந்த அறையில் பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வேகமாக எழுந்து அவருடைய அறைக்கு ஓடினர். அப்போது செல்போன் வெடித்து சிதறியது. அதனால் ஏற்பட்ட தீ அவர் படுத்திருந்த கட்டில் உள்ள மெத்தையில் பிடித்து மளமளவென எரிந்து கொண்டிருந்தது. இதில் படுகாயமடைந்த சிவராமனின் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிவராம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுக்கரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவராமின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *