மருந்து வாங்குவதற்காக சென்ற விவசாயி…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட்டிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி மருந்து வாங்குவதற்காக சிறுவாச்சூரில் உள்ள மருந்தகத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவாச்சூர் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டிலிருந்து நிலைதடுமாறி பெரியசாமி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் பெரியசாமியை மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பெரியசாமியின் மனைவி தனம் பெரம்பலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *