சாலை விதி மீறிய எம்.எல்.ஏ…. அபராதம் விதித்து காவல்துறை அதிரடி..!!

ஒடிசா மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறையை மீறியதாக கூறி பிஜேடி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ஒடிசாவின் புவனேஸ்வர் மாநகரத்தின் முன்னாள் மேயரான பிஜேடி கட்சியைச் சேர்ந்த ஆனந்த நாராயணன் என்பவர் மத்திய புவனேஸ்வரர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் அனந்தநாராயணன் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related image

சாலை விதிமுறைகள் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது அவர் தவறுதலாக நோ பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்தியதால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பேசிய அனந்த நாராயணன் தனது ஓட்டுநர் விதியை மீறி வாகனத்தை நோ பார்க்கிங்கில் நிறுத்தி விட்டதாகவும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அனைவரும் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.