அதிமுக நிர்வாகிகள் கூட்டம்…. “உடல்நலம்” காரணமாக குன்னம் எம்.எல்.ஏ பங்கேற்கவில்லை…!!

சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் உடல் நலம் காரணமாக பங்கேற்கவில்லை.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை கட்சியின்  தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

Image result for குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன்

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் குன்னம் எம்.எல்.ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை . உடல்நலக்குறைவால் குன்னம் ராமச்சந்திரன் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவர் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது