பாஜக எம்எல்ஏ சரஸ்வதி இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்ற தகவல் வெளியான நிலையில் அப்போது அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவரின் மருமகனான ஆற்றல் அசோக்குமார், மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக களமிறங்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. மேற்கூறிய தகவலை அதிமுக நிர்வாகிகள் சிலர் கசிய விட்டு வருகின்றனர்.