வீதிவீதியாக சென்று பிரசாரம்…… மக்கள் குறைகளை கேட்டறிந்த மு.க ஸ்டாலின்….!!

திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக ,  இந்திய ஜனநாயக  கட்சி , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மூ.லீ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன .

Image result for திருவாரூரில் வீதிவீதியாக சென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்

இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அவர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜு_க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.அப்போது ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து  உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது . முக.ஸ்டாலினும் வீதிவீதியாக சென்று  வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.