மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி…அரையிறுதி சுற்றுக்கு…முன்னேறிய ஆஷ்லி பார்ட்டி …!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், அரையிறுதி சுற்றுக்கு நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி  முன்னேறி உள்ளார்.

அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய, உலக தரவரிசை பட்டியலில்,2வது இடத்தை பெற்றிருக்கும் ரஷ்ய வீரரான  டேனில் மெட்விடேவ், அமெரிக்க வீரரான  பிரான்சிஸ் டியாபோவுடன் மோதி 6-4, 6-3 என்ற நேர்செட்டில், டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்று  கால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுபோல பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில்  கால் இறுதிச்சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆஷ்லி பார்ட்டி, தரவரிசை பட்டியலில் 8வது இடத்தில் உள்ள,  சபலென்காவை 6-4 ,6-7 (5-7) ,6-3 என்ற செட் கணக்கில் தோல்வியடையச் செய்து ஆஷ்லி பார்ட்டி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு  காலிறுதிப் போட்டியில், இடம்பெற்றிருந்த தரவரிசை பட்டியலில், 5வது இடத்தில் உள்ள  எலினா ஸ்விடோலினா 6-3 ,6-2 என்ற  நேர் செட்டில், செவஸ்தோவாவை தோற்கடித்து வெற்றி பெற்றார். இதில் எலினா ஸ்விடோலினா ,முதல்முறையாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அரையிறுதி போட்டிக்கு ஆஷ்லி பார்ட்டி – எலினா ஸ்விடோலினா மோதிக் கொள்கின்றன. இந்த அரையிறுதிப் போட்டியில்    ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்றால் ,அவர் நம்பர் ஒன் இடத்தில் இருப்பார் . அதற்கு மாறாக அவர் தோல்வி அடைந்தால், ஜப்பான் நாட்டு வீராங்கனையான நவோமி ஒசாகா போட்டியில் வெற்றி பெற்றால் ,நம்பர் ஒன்   இடத்திற்கு தகுதி பெறுவார் .