மியான்மரில் தொடரும் போராட்டம்… மக்களை சுட்டு குவிக்கும் ராணுவம்… சர்வதேச நாடுகள் கண்டனம்…!!!

மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதற்கு சர்வதேச நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மியான்மரில் கடந்த சில மாதங்களாகவே ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதனால் இந்தப் போராட்டத்தை தடுக்கும் வகையில் ராணுவத்தினர் அடக்கு முறையை நடத்தி வருகின்றனர். ஆனால் அதை எல்லாம் மக்கள் பொருட்படுத்தி கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் ராணுவத்தினரால் பல பேர் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பல பேரை கைது செய்து சிறையில் அடைத்தது. அதன்பிறகு பல கோரிக்கை விடுத்து அவர்களை விடுதலை செய்துள்ளது. மேலும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனால் கடந்த சனிக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களின்மீது ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் ஒரே நாளில் 114 பேர் சுட்டுபரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை ஆகும் .

அதுமட்டுமல்லாமல் மியான்மார் ராணுவத்தினாரல் தற்போது வரை 459 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதனால் இந்த சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்துள்ளது. மேலும் அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதி கதேரின் டை என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு மியான்மார் உடன் மேற்கொள்ளப்பட்ட முதலீடு வர்த்தக ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலை தெரிவித்துள்ளார். மேலும் மியான்மரில் ஜனநாயக முறையில் அரசாங்கம் அமையும் வரை நாட்டுடனான வர்த்தக உறவுகளை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.