மலேசியாவில் காணாமல் போன சிறுமி – தூக்கிச் சென்றப் பூதம்..!!!!!

மலேசியாவில் சிறுமியை தூக்கிக்கொண்டு போனது பூதம் என்று  மந்திரவாதி  போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மேயப் மற்றும் செபஸ்டின் மகளான மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட 15 வயது  சிறுமி நோரா குயிரியுடன் மலேசியாவிற்க்கு சுற்றுலா சென்றனர். இவர்கள் குடும்பத்துடன் மலேசியாவில் DUSUN ஹோட்டலில் தங்கினர். ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி அவர்கள் தங்கிய வீட்டில் இருந்து திடிரென நோரா குயிரின் காணாமல் போனார். அவரது பெற்றோர் மேயப் மற்றும் செபஸ்டின் வீடு முழுவதும் தேடி பார்த்தனர் கிடைக்கவில்லை.

 

Image result for malaysia missing child nora quoirin

 

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் சோதனை செய்த போலீசார் வீட்டை சுற்றிலும் சேறு நிறைந்து இருந்ததால் யாராவது வந்து நோராவை தூக்கிச்சென்றிருந்தால் கால் தடங்கல் இருந்திருக்கும் அப்படி எதுவும் இல்லை என்றும் நோராதான் தானாக நடந்து சென்றிக்க வேண்டும் என்ற கோணத்தில் தேடுதலில் இறங்கினர். மேலும் மலேசியாவில் காணாமல் போனவர்களை தேடுவதற்கு போலிஸார் மந்திர வாதிகளின் உதவிகளை நாடுவது சாதாரண ஒன்றாக இருந்து வருகையில் தற்போது இது தொடர்பான விவரங்களை கேட்பதற்க்கு சாமன் எனப்படும் மந்திரவாதி ஒருவரை அழைத்து வந்தனர்.

 

Related image

 

அவர் பூதம் ஒன்று சிறுமி நோராவை சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தை என்பதால்  அவளை தனது தத்துப் பிள்ளையாக வளர்ப்பதற்காக தூக்கி சென்று  உள்ளதாக தெரிவித்தார். இன்றிரவு நான் அந்த ஆவியிடம்  நோராவை  எங்கிருந்து தூக்கிச் சென்றாயோ அதேபோல் திரும்ப கொண்டு வந்து விட வேண்டும் என கூறுவேன், மேலும் பதிலுக்கு வேறு ஏதாவது கொடுக்க வேண்டும் என்றால் நான் அதை கொடுத்து விடுவேன் என்றும், நோரா கண்டிப்பாக கிடைத்து விடுவாள் என்றும் கூறியுள்ளார்.

 

Image result for malaysia missing child

 

இந்நிலையில் நோரா காணாமல் போய் ஒரு வாரத்திற்கு மேல் ஆனதால் இறந்த உடல்களை தேடும் நாய்களுடன் களத்தில் இறங்கினர். மேலும் தேடுதல் வேட்டையை தீவீர படுத்த மேயப் மற்றும் செபஸ்டின் நோராவை கண்டு பிடித்து தருபவர்களுக்கு  10 ஆயிரம் பவுண்டுகள் பரிசு தருவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டிஷ் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.