மிஸ் பண்ணாம செய்து பாருங்க…! ஈஸியான சமையல்..!

தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான உணவுப்பொருட்களில் ஒன்று . இதை பலவிதமாக சமைக்கலாம். அலுவலக வேலைக்கு செல்பவர்கள் விரைவாக சமையல் செய்வதற்கு பெரும் உதவியாக அமைகிறது. இந்நிகழ்வில்  வெண்பொங்கல் சமையல் பற்றி காண்போம்.

வெண் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் :

தேவை  :                                                                                                                                                                                                           பச்சரிசி                                          –    250 கிராம்

தண்ணீர்                                        –   600  மி .லி

கருவேப்பிலை                          –   சிறிதளவு

வறுத்த  பாசிப்பருப்பு              –   50 கிராம்

மிளகு                                            –   1 டீஸ் பூன்

முந்திரி பருப்பு                          –   சிறிதளவு

உப்பு                                               –   தேவையான    அளவு

 

செய்முறை :

முதலில் பாத்திரத்தை நன்றாக கழுவ வேண்டும்.  பாத்திரத்தில் பச்சரிசியையும், பாசிபருப்பையும் தனித் தனியாக பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்,

.  பின்னர் குக்கரில் இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். குக்கரில் 2-4 விசில் விட்ட பிறகு இறக்கி வைக்கவும்.

வேக வைப்பதற்கு முன் நன்றாக எண்ணெய் ஊற்றி சூடுபடுத்திய பிறகு மிளகு, கருவேப்பிலை வறுத்த பாசிப்பருப்பு, முந்திரி பருப்பு உள்ளீட்ட பொருட்களைக் சேர்த்து பொன்முறுவலாக வதக்கி கொள்ள  வேண்டும். உடல் செரிமானத்திற்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அத்துடன் வதக்கி  வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சூடான ருசியான வெண் பொங்கல் ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் நாவிற்க்கு சுவையாகவும் மனதிற்கு இனிமையாகவும்  இருக்கும்.