பழுதடைந்த மின் கம்பி…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் புதுத்தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விவசாயியான இவர் அ.ம.மு.க ஊராட்சி கழகச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் அதே பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவருக்கு சொந்தமான நிலத்தை ஒத்திக்கு எடுத்து அதில் சாகுபடி செய்து வந்துள்ளார். அதன்பின் நிலத்தில் நடவு நடுவதற்கான பணியில் ஈடுபடுவதற்காக விஜயகுமார் என்பவருடன் டிராக்டரில் வயலுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து வயலின் ஒரு புறத்தில் இருந்த மேடு பள்ளங்களை சீர் செய்து கொண்டிருக்கும் போது மேலே இருந்த மின்கம்பி திடீரென அறுந்து ஜெயராமன் வயலின் விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதற்குப் பிறகு ஜெயராமின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சமயம் ஒரத்தநாடு பகுதியில் பழுதடைந்த இருக்கும் மின்கம்பிகள் அறுந்து விழும் சம்பவங்களினால் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பழைய மின் கம்பிகளை அகற்றி விட்டு புதிதாக மின் கம்பிகள் அமைத்து தர வேண்டும் எனவும், மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜெயராமனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு காவல்துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய காரணத்தினால் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *